எமது சேவைகள்

உங்களுக்கு மற்றும் உங்களது அன்புக்குரியவர்களுக்கு கிடைக்க வேண்டிய மகிழ்ச்சி மற்றும் பாதுகாப்பினை நாம் வழங்குவோம்!

இலங்கையின் சமூகத்திற்கு அவர்களின் தோட்ட மற்றும் சொத்து நிருவாக சேவைகள் பதவி, இனம், ஆண் பெண்பால், நிறம், மொழி அல்லது சமயத்தினை கருத்திற் கொள்ளாது நிறைவேற்றுவதற்காக பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

ஆரம்பம் தொடக்கம் எமது நோக்கங்களாக அமைவது தேசத்தின் நலனிற்காக முன்னெடுத்து எமது வாடிக்கையாளர்களின் செயற்பாடுகளை முகாமைத்துவத்திற்கு உட்படுத்தி பலமுடன் முன்னெடுத்துச் சென்று சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை மக்கள் எம்மீது வைத்துள்ள தொடர்ச்சியான நம்பிக்கையினை உறுதிப்படுத்துவதாகும்.

புலமைப் பரிசில் வழங்கள்

நம்பிக்கைப்பொறுப்பின் இறுதி விருப்பாவணத்தின் பிரதான குறிக்கோள் புலமைப்பரிசில் வழங்குதல் என குறிப்பிடப்பட்டு நிறுவப்பட்ட நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் இதுவாகும். இதன் மூலம் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்குப் புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன.

வைத்திய உதவியினை வழங்குதல்

இறுதி விருப்பாவணங்கள் மற்றும் நம்பிக்கைப் பொறுப்பு நிதியங்களின் குறிக்கோள்களுக்கு அமைவாக வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர்களுக்கு மருத்துவ வசதிகளும் நிதியுதவிகளும் வழங்கப்படுகின்றன. விண்ணப்பம் கோரப்பட்டு மருத்துவ உதவி பெறத் தகுதியாளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

விஹாரை சொத்து அபிவிருத்தி மற்றும் பராமரிப்புக்களை மேற்கொள்ளல்.

இறுதி விருப்பாவணம் மற்றும் பொறுப்புப் பத்திரங்களில் உள்ள குறிக்கோள்களின் படி, சமய வலிபாட்டுத் தளங்கள் மற்றும் சமயரீதியான நிறுவனங்களுக்குச் சட்டரீதியாக உறுதி ஒப்பந்தங்களின் பிரகாரம் கொடுப்பனவுகளை மற்றும் ஏனைய நன்கொடைகளை வழங்குதல் இதன் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.

நற்கரும உதவிகள் மற்றும் நன்கொடை

பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக, பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தின் கீழ் பல்வேறு சமூக நலன்புரி மற்றும் புண்ணிய கருமங்களுக்காக நம்பிக்கைப் பொறுப்புகளை நிறுவுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. அத்தகைய நம்பிக்கைப் பொறுப்புகளின் ஊடாக சமயக் கருமங்கள், கல்விக்கான நிதியுதவிகள் (புலமைப்பரிசில்),மருத்துவ உதவிகள், சிறுவர் மற்றும் முதியோர் நலன்புரி போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. சமூக நலன்புரி மற்றும் புண்ணிய கருமங்களுக்காக பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தில் உங்களது நிதிப்பங்களிப்பின் மூலம் புதிய நம்பிக்கைப் பொறுப்புகளை நிறுவ முடியும். இது தொடர்பாக எமது திணைக்களத்துடன் தொடர்புகொள்ளவும். அத்துடன், ஏற்கனவே நிறுவப்பட்டு மேற்குறிப்பிட்ட சமூக நலப்பணிகளை முன்னெடுத்து வரும் நம்பிக்கைப் பொறுப்புகளுக்கு உங்களது தாராளமான நன்கொடைகளையும் வழங்க முடியும். நம்பிக்கைப் பொறுப்பொன்றை நிறுவுதல்

சொத்து முகாமைத்துவம்

நீதிமன்றக் உத்தரவுகளின் அடிப்படையில் அல்லது இறுதி விருப்பாவணங்கள் (உயில்) மூலம் பொது நம்பிக்கைப் பொறுப்பாளரை இறுதி விருப்பாவண நிருவாகியாக நியமித்து திணைக்களத்திடம் உரித்தளிக்கப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இந்தத் திணைக்களத்திற்கு உரியதாக உள்ளன. அத்தகைய ஆதனங்களின் மூலம் ஈட்டப்படும் வருமானத்தைக் கொண்டு, குறித்த ஆதனங்களது உரிமையாளர்களின் குறிக்காள்கள் நிறைவேற்றப்படுகின்றன.

ஏனைய சேவைகள்


வெளிநாட்டு இழப்பீடு

வெளிநாடுகளில் பணிபுரியும் போது உயிரிழந்த அல்லது அங்கவீனமுற்ற இலங்கையர்களுக்காகக் கிடைக்கும் இழப்பீட்டுத் தொகை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாக பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்திற்கு அனுப்பப்படும்.

விகாரை இழப்பீடு

1944 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க விகாரை காணி இழப்பீட்டுக் கட்டளைச் சட்டத்துக்கு அமைய வழிபாட்டிடங்களுக்குச் சொந்தமான காணி நிலங்கள் அரச கருமங்களுக்காக கையகப்படுத்தப்படும்போது வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையானது இத்திணைக்களத்தில் வைப்பிலிடப்படுவதுடன், பௌத்த விவகார ஆணையாளர் நாயகத்தின் அனுமதியின் அடிப்படையில் விடுவிக்கப்படும்.

தனிநபர் நம்பிக்கைப் பொறுப்பு உதவிகள்

திணைக்களத்தில் நிறுவப்பட்டுள்ள நம்பிக்கைப் பொறுப்புகள் மற்றும் இறுதி விருப்பாவணங்கள் ஊடாக மரணச் சொத்துக்களின் நிறைவேற்றுனராக பொதுநம்பிக்கைப் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள மரணச் சொத்துக்களில் பயனாளிகள் குறித்து பகுதியளவில் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ள நம்பிக்கைப் பொறுப்புகள் மற்றும் மரணச் சொத்துகளுடன் தொடர்புடைய குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கும், பொதுவான நோக்கங்கள் அல்லாத தனிப்பட்ட நோக்கங்களை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட நம்பிக்கைப் பொறுப்பு இதுவாகும்.